தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். வாதி சினிமா நடிகையான இவர் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி ஒரு மகன் மற்றும் மகளை பெற்றெடுத்த பிறகு முதல் கணவரை விவாகரத்து செய்தார்.
இதனையடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இன்னொரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறகு அந்த கணவரையும் விவாகரத்து செய்தார். மகன் அவருடைய அப்பாவுடன் வசித்து வரும் நிலையில் தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வந்தார்.
ஆனால் சமீப நாட்களாக இரண்டாவது மகளை எந்த ஒரு வீடியோ, புகைப்படத்திலும் பார்க்க முடிவது இல்லை. இதனால் பலரும் இரண்டாவது குழந்தை ஜெயனிதாவுக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பி வந்த நிலையில் வனிதா பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார்.
தனது இரண்டாவது மகள் அவளுடைய அப்பாவுடன் இருக்கிறார். ஹைதராபாத்தில் படித்து வருகிறார். சமீபத்தில் கூட நான் சென்று அவளை பார்த்து வந்தேன் என தெரிவித்துள்ளார். அவளுக்கு எப்போதும் ஞாபகம் எல்லாம் இங்கே தான் இருக்கும். இந்த வயசுல கட்டாயம் அவளுடன் ஒருவர் இருக்க வேண்டும். நான் பிஸியாக இருப்பதால் அவள் அப்பாவுடன் பாதுகாப்பாக இருக்கிறாள் என தெரிவித்துள்ளார்.
#Vanitha About Her Second Daughter pic.twitter.com/ViSDykqTvI
— chettyrajubhai (@chettyrajubhai) September 25, 2022