தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு நாயகியாக நடித்து பிரபலமானவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் ஆகாஷ் என்பவளை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.
அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த வனிதா பிறகு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அவரையும் விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் தற்போது தனது அடுத்த இன்னிங்ஸ்ஸை தொடங்கி பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
பீட்டர் பால் என்பவருடன் இவரது இரண்டு மகன்களின் முன்னிலையில்இவரது இரண்டு மகன்களின் முன்னிலையில் மூன்றாவது திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு அவரை பிரேக்கப் செய்தார். எங்களுக்கு சட்ட ரீதியாக திருமணமாகவில்லை எனவும் தெரிவித்தார். இதைத் தொடங்கி தற்போது தனது மகள் ஜோவிகாவை வெள்ளித் திரையில் எப்படியாவது நடிகையாக்கி விட வேண்டும் என தீயாக வேலை செய்து வருகிறார்.
இப்படியான நிலையில் வனிதா விஜயகுமார் நான்காவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் வனிதா விஜயகுமார் தோன்றும் பதில் நிச்சயம் திருமணம் செய்வேன் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.