வனிதா விஜயகுமார் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். இவரது மகள் வனிதா விஜயகுமார். சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து காக்கைச் சிறகினிலே, நான் ராஜாவாக போகிறேன் போன்ற பல படங்களில் நடித்த பிரபலமானவர்.
இது மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராபர்ட் மாஸ்டருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அக்டோபர் ஐந்தாம் தேதி அப்டேட் காத்திருக்கு என்று பதிவிட்டு இருந்தார்.
அந்த வகையில் ரசிகர்கள் பலரும் மீண்டும் ராபர்ட் மாஸ்டரை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா வனிதா? என்ற தகவல் பரவி வந்தது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
வனிதா விஜயகுமாரின் பிறந்த நாளான இன்று இந்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இது திருமணம் குறித்த தகவல் எதுவும் இல்லை என்றும் படத்தின் அப்டேட் தான் என்றும் இதில் தெளிவாகத் தெரிகிறது.
View this post on Instagram