Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட வரலட்சுமி சரத்குமார்..வைரலாகும் வீடியோ

Actress Varalakshmi sarathkumar affected in corona

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோயினியாக இருப்பவர்தான் வரலட்சுமி சரத்குமார். இவருக்கு தற்போத கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த பதிவில் அவர் அனைவருக்கும் குட்மார்னிங். எனக்கு இன்று நல்ல குட் மார்னிங்காக அமையவில்லை. எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணிதல் உள்பட அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டேன்.

இருப்பினும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும். கொரோனா நம்மை விட்டு இன்னும் அகலவில்லை. எல்லோரும் மாஸ்க் அணியுங்கள். உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.