தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பாய்ஸ். சித்தார்த், பரத், தமன், விவேக் என எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் நடிகை ஜெனிலியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
வாலிபத்தை அடையும் வாழ்க்கையை அப்படியே அழகாக செதுக்கி படமாக கொடுத்தார் ஷங்கர். இதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது படத்தை ஜெனிலியாவுக்கு பதில் வேறொரு நடிகை நடிக்க இருந்த விஷயம் தெரிய வந்தது.
அதாவது முதலில் ஜெனிலியாவுக்கு பதில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க இருந்துள்ளார். சித்தார்த்தையும் அவரையும் வைத்து டெஸ்ட் போட்டோ சூட் எல்லாம் நடைபெற்று உள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் நடிகை சரத்குமார் வரலட்சுமி இப்போதைக்கு நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டு விடவே இந்த படம் அவரை விட்டு சென்றதாக தெரிய வந்துள்ளது.