தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு வந்தவர் வினுஷா தேவி. இவர் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் தற்போது வீட்டுக்குள் நடப்பதை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
அதாவது நிக்சன் தன்னை அக்கா அக்கானு அழைத்து பின்னாடி உருவ கேளி செய்துள்ளார். திடீரென ஒரு நாள் சாரி கேட்டான், அது இதுக்காக தான் என்பது எனக்கு வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது என கூறியுள்ளார்.
மேலும் மாயா காலையில் எழுந்ததும் இன்னைக்கு வாங்குற சம்பளத்துக்கு யாரை டார்கெட் செய்யணும்? என்ன செய்யலாம் என சிலருடன் சேர்ந்து பேசி திட்டம் போடுவார். வெளியே இருந்து பார்ப்பது போல இந்த நிகழ்ச்சி கிடையாது என கூறியுள்ளார்.
