பிரபல சமூக வலைத்தளமாக இருக்கும் youtube பக்கத்தில் பலவிதமான நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு பிரபலமான ஜி.பி.முத்து அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார். இந்நிகழ்ச்சி தொடங்கி இருக்கும் இந்த ஆறு நாட்களில் இணையத்தில் அதிக அளவில் ட்ரெண்டிங்காக இருந்து வரும் ஜி.பி.முத்து அவர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள மற்ற போட்டியாளர்கள் அதிக அளவில் டார்கெட் செய்து வருவதால் அவருக்கு சப்போர்ட்டிவாக ரசிகர்கள் ஆர்மி உருவாக்கி அதன் மூலம் சப்போர்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜி.பி.முத்துவுக்கு ஆதரவாக நடிகை யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் “தலைவரே ஜி.பி.முத்து நீங்க அழாதீங்க, நாங்கள் உங்களுக்கு இருக்கோம். #GPMuthuArmy” என்ற ஹேஷ் டேக்குடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதரவை வெளிப்படையாக பதிவிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் யாஷிகாவின் இந்த பதிவை இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்து ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
Don’t make my thalaivaa cry 😭 #GPMuthuArmy #biggboss6tamil we are with u . 💪💙
— Yashika Anand (@iamyashikaanand) October 14, 2022