நடிகர் சிங்கமுத்து சமீபத்தில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நகைச்சுவை என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். கடவுள் நமக்கு கொடுத்து இருக்கிற சிறப்பு போனஸ் தான் சிரிப்பு. அது போல யாருமே வாய்விட்டு சிரிக்க மாட்டேங்கிறாங்க.
அவர்களை எல்லாம் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான், நாங்கள் எல்லோரும் சினிமாவில் இரவு பகலாக யோசித்து எப்படி எழுதலாம் எப்படி சிரிக்க வைக்கலாம் எந்த காட்சியை காட்டினால் சிரிக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறோம்.
கலைத்துறை என்பது பொழுதுபோக்கு மட்டுமின்றி மக்களை சிந்திக்க வைப்பதற்கான ஒரு ஆயுதமாகும். சினிமாவில் நடிக்கிற நடிகைகள் பொதுமக்கள் வெறுப்பு வராத அளவுக்கு ஆடைகளை அணிந்து நடிக்க வேண்டும். அப்போது தான் நமது தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றதாகும்.
கொரோனாவுக்கு பயந்து மக்கள் சினிமா தியேட்டருக்கு செல்லாமல் இருந்துவிடாதீர்கள். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தியேட்டருக்கு சென்று சினிமா தொழிலை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு நடிகர் சிங்கமுத்து கூறினார்.