Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாஸ்க் அணியாம‌ல் காரில் வ‌ந்த‌ ’அருவி’ ந‌டிகை: அப‌ராத‌ம் விதித்த அதிகாரியுடன் வாக்குவாதம்

தமிழ் சினிமாவில் அருண் புருசோத்தமன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் அருவி. இந்த படத்தில் நாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் அதிதி பாலன்.

அவ்வளவு பாராட்டுகள் குவிந்தும் அடுத்தடுத்து நடிக்க படங்கள் ஏதும் அமையவில்லை. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்து இருந்தது.

இந்நிலையில் நடிகை அதிதி பாலன் முகக்கவசம் இன்றி வெளியில் வந்ததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.200 அவருக்கு அபராதம் விதித்தனர்.

ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பிறகு அதிதி பாலன் ரூ.200 அபராதம் கட்டி சென்றதாக கூறப்படுகிறது. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது .