தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர். இவரது இரண்டாவது மகளான அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமானார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து அதிதி அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் அஜித்தை வைத்து ஆரம்பம், பில்லா உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.