தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வலிமை தரும் படம் வெளியானதை தொடர்ந்து அடுத்து தல 62 என்ற படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வாரம் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் அவர்கள் உடல் நலக் குறைபாடு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் அவர்கள் அஜித்குமாரை அவரது வீட்டில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார்.
அதாவது, தமிழ் திரையுலகின் மிகமுக்கியமான முன்னணி நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜு அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிற வாய்ப்பு அமைந்தது. அனுபவமும், மனப்பக்குவமும் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டுமென்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது.
‘எண்ணம்போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை’ அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க! என பதிவு செய்துள்ளார். இது குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்த்திரையுலகின் மிகமுக்கியமான முன்னணி நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் @Kadamburrajuofl அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம்.
(1/3) pic.twitter.com/cewbOYiqCW
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 2, 2023