Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தியேட்டர் ரிலீசில் சிக்கல் – ஏலே படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

Aelay to release directly on OTT

சில்லுகருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது சமுத்திரக்கனியை வைத்து ‘ஏலே’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தயாரிப்பாளர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. மேலும் 27ம் தேதி ஓடிடி-யில் ரிலீஸாக ஒப்பந்தமும் செய்து இருந்தார்கள்.

மாஸ்டர் சர்ச்சையால் தியேட்டரில் ரிலீஸாகி குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடி-யில் ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான் தியேட்டரில் வெளியிடவே அனுமதி அளித்துள்ளார்கள். இதனால் இப்படத்தின் தியேட்டர் ரிலீசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், படக்குழுவினர் நேரடியாக பிப்ரவரி 28 ஆம் தேதி ஞாயிற்று கிழமை பிற்பகல் 3 மணிக்கு டிவியில் ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறார்கள். சமீபத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி திரைப்படமும் நேரடியாக டி.வியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.