விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், ஓவியா நடிப்பில் வெளியான படம் `மதயானை கூட்டம்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்குப் பிறகு விக்ரம் சுகுமாறன் `இராவண கோட்டம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், விக்ரம் சுகுமாறன் அடுத்ததாக மீண்டும் கதிரை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய படத்தை லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் தயாரிக்க இருக்கிறார். விரைவில் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.