Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அக்னிச் சிறகுகள் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்

Agni Siragugal Movie Update

விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அக்னிச்சிறகுகள்’. ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். மூடர்கூடம் நவீன் இயக்கி உள்ள இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் அருண் விஜய். அதன்படி அக்னிச் சிறகுகள் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் அருண் விஜய் இப்படத்தில் ரஞ்சித் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.