தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டத்து யானை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு திரையுலகம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் இவர் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.
அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் திருமண ரிசப்ஷன் சமீபத்தில் நடந்தது. திரை உலகப் பிரபலங்கள் படை சூழ்ந்து மணமக்களை வாழ்த்தினர்.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா மற்றும் உமாபதி ஆகியோர் தங்களது திருமண கொண்டாட்டம் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.
View this post on Instagram