தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இருவரும் அவரவர் பாதையில் பயணிக்கத் தொடங்கினர். தனுஷ் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்த தொடங்க ஐஸ்வர்யா தான் இயக்கும் இசை ஆல்பத்தில் கவனம் செலுத்தி வந்தார்.
பொதுவாக விவாகரத்துக்கு பிறகு பிரபலங்கள் சமூகவலைதளத்தில் தங்களது பெயருக்கு பின்னால் இருக்கும் கணவரின் பெயரை மாற்றி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமந்தாவின் விஷயத்திலும் இது நடைபெற்றது.
ஆனால் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்காமல் இருந்து வருகிறார் ஐஸ்வர்யா. ஆனால் சமீபத்தில் வெளியான இவரது இசை ஆல்பம் டீசரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என தனது பெயரை குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் மீண்டும் தனுஷூடன் ஆனால் விவாகரத்தை அவர் உறுதி செய்து இருப்பதாக சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர்.
