தற்போது வரை உலக அழகியாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்திய ஐஸ்வர்யா ராய் ஒரு காலகட்டத்தில் ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதில் அதிக சம்பளம் பெறக்கூடிய முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருந்தார்.
அதற்குப்பின் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு அழகிய பெண் குழந்தையும் பெற்றெடுத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் மனம் திறந்து சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அப்போது அவரிடம் தாம்பத்தியம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அசத்தலான பதில் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதாவது அவர் பேசிய போது உள்ளமும், உணர்ச்சியும் ஒன்று சேர இருவருக்கும் வர வேண்டும் அப்போதுதான் அது இன்பத்தையும் நிம்மதியும் தரும்.
இல்லையெனில் அது காமத்திற்காக செய்யப்படும் ஒரு செயலாகவே தோன்றும். அதாவது கணவன் மனைவியாக இருந்தாலும் இருவரும் மனதார அந்த உறவில் ஈடுபட வேண்டும். கடமைக்காக எதையும் செய்யக்கூடாது நானும் என் கணவரும் நிம்மதியாக இருக்கின்றோம். என்னால் அவர் சந்தோஷமாக உள்ளார். அவரால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் எங்கள் தாம்பத்தியம் இதுதான் என்று கூறி அனைவரையும் அசத்தி இருக்கிறார்.
