நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ராஜேஷ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவர்.
காக்க முட்டை திரைப்படம் முதல் தற்போது வரை பல எதார்த்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
மேலும் இப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கான ஆடிஷன் நடந்துள்ளது, இதில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவரிடம் உங்களுக்கு தெரிந்த அனைத்து கேட்ட வார்த்தைகளையும் பேசுமாறு இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
இதற்கு யோசித்த நடிகை ஐஸ்வர்யா, பின்னர் அவருக்கு தெரிந்த அனைத்து கேட்ட வார்த்தைகளையும் அவரிடம் கூறியுள்ளார்.
இதை கேட்டவுடன் நீங்கள் தான் இப்படத்தின் கதாநாயகி என கூறினாராம். இதனை ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
#Vetrimaaran 😂😂😂 pic.twitter.com/TSIcLOgm0p
— P R E M (@cinemaforlife__) August 18, 2020