தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒருமனதாக பிரிய முடிவெடுத்து விட்டனர்.
இவர்களின் விவாகரத்து தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் இருவரும் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டி ஒன்றில் ஆமாம் நான் காதலிக்கிறேன்.
ஒரு போதும் அன்பை அடக்கி வைக்கக் கூடாது. நான் என் அப்பாவை அம்மாவை எனது இரண்டு மகன்களை காதலிக்கிறேன் என கூறியுள்ளார். காதல் என்பது தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கு இடையே இருப்பது மட்டும் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
