இந்திய சினிமாவில் தொழில் ரீதியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் சிவாஜி ராவ் கெய்க்வாட், முக்கியமாக தமிழ் சினிமாவில் மிக பெரிய ஜாம்பவான் ஆவார். 50 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில், அவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களைச் செய்துள்ளார்.
ரஜினிகாந்த்-ன் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ்த் திரையுலகில் தனது வாழ்க்கையைப் பின்னணிப் பாடகியாகப் பார்த்தி பாஸ்கர் இயக்கிய வெளிவராத ரமணா திரைப்படத்தில் தொடங்கி, இவர் 2012-ல் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்குவது தெரிந்த விஷயம் இதில் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரும் உள்ளனர் இதற்கிடையில் ஒரு உதவி இயக்குனர் தனது கதையை தான் லால் சலாம் படமாக எடுத்திருக்கிறார்கள் என்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
இதை அடுத்து இயக்குனர் ஐஸ்வர்யா அந்த கதையை வாங்கி படித்திருக்கிறார் பின்னர் லால் சலாம் வேறு மாதிரியான கதை என்று தெரிந்திருக்கிறது அத்துடன் அந்த பிரச்சினைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது, இது அணைத்து சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.
