தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் திடீரென இருவரும் பிரிய இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனி இருவரும் அவரவர் பாதையில் பயணிக்க விரும்புவதாக தனுஷ் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். இப்படியான நிலையில் தற்போது முசாபிர் என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதுவும் இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் சிம்புவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷுக்கு போட்டியாக பார்க்கப்படும் நடிகர் சிம்புவை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தை இயக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
