தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். திறமையான நடிகர் என பெயர் எடுத்த இவரது நடிப்பில் தற்போது கோப்ரா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் விக்ரம் ரசிகர் ஒருவர் எனக்கு கடந்த 16ம் தேதி பிறந்த நாள் நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்வீர்கள் என நினைத்தேன் இப்போதாவது வாழ்த்துங்கள் என கேட்டிருந்தார்.
அதன் பிறகு அஜய் ஞானமுத்து அந்த ரசிகருக்கு வாழ்த்துக் கூறி இருந்தார். மேலும் அந்த ரசிகர் என்னுடைய பிறந்தநாள் கிப்ட் ஆக கோப்ரா டீசர் அல்லது அப்டேட் கொடுங்கள் எனக் கேட்டிருந்தார்.
அதற்கு அஜய் ஞானமுத்து கூடிய விரைவில் டீசர் வரும் என பதிலளித்துள்ளார். இதனால் விக்ரம் ரசிகர்கள் அந்த நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.
Sorryyy!! Maybe I missed it!! Belated birthday wishes bro 🤗🤗
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) June 23, 2020
Soooooooon👍🏻
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) June 23, 2020