தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக ajith 61 ஒன்று என்ற திரைப்படம் உருவாக உள்ளது.
மீண்டும் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் தற்போது படத்தில் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டன்ட் மாஸ்டராக சுப்ரீம் சுந்தர் அவர்கள் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் டைட்டில் உட்பட படத்தில் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.