தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள தனது 61வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இது ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருப்பதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சூர்யாவுடன் என் ஜி கே மற்றும் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த தெலுங்கு நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித் ப்ரொஃபஸர் கதாபாத்திரத்திலும் கவின் மாணவர் வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.