தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி வலிமை திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அஜித் 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வினோத் இயக்கம் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.
படத்தில் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சுவாரியர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது அஜித் இந்த படப்பிடிப்புகளுக்கு நடுவே வெளிநாட்டுக்கு பைக்கில் சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த நிலையில் அஜித் இல்லாமல் இன்னொரு பக்கம் அஜித் 61 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. அது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
