தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர் சங்கத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை.
வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பு வெளியான இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் உருவாகி வரும் 61வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் இன்று இணையத்தில் லீக்காகி உள்ளது. அஜித் 60 படத்திற்கு வலிமை என டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்திற்கு வல்லமை என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
