தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் முன் கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.
தற்காலிகமாக ajith 61 என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தொடங்கி அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படியான நிலையில் தற்போது அஜித் 61 படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறுகிய கால பட்ஜெட்டாக இந்தத் திரைப்படம் உருவாக இருப்பதால் இந்த வருடத்தின் இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
