தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வலிமை என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இதே கூட்டணியில் உருவாகி வரும் அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகளை விரைவாக முடித்து இந்த வருட தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக இந்த படத்திற்கு அஜித் 62 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகளை அக்டோபர் மாதத்தில் தொடங்கி ஒரே கட்டமாக முடித்து அடுத்த வருடம் ( 2023 ) கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
