Tamilstar
News Tamil News

கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து அன்றே கணித தல அஜித், இதுவரை யாரும் பார்த்திராத பேட்டி!

தல அஜித்குமார் தற்போது தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக மாறியுள்ளார். இவருக்கு நம்பமுடியாத அளவு ரசிகர்கள் வட்டம் உள்ளது.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். அப்படத்தின் படப்பிடிப்பும் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தல அஜித் நடிப்பு மட்டுமின்றி விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர், மேலும் இவர் போர்முலா ஒன் ரேசராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் பழைய நேர்காணல் நிகழ்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் விளையாட்டு குறித்து கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த அஜித் “T20 தான் வருங்கால கிரிக்கெட்டாக இருக்கும்” என கூறியுள்ளார்.

அவர் கூறியபடி T20 கிரிக்கெட் தான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.