நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய தூண்களாக விளங்குகிறார்கள். இவர்களின் திரைப்படங்களால் தான் பலரும் பல வகையில் பயனடைந்து வருகிறார்கள்.
இருவரும் அவர்களுக்கான ஸ்டைலில் திரைப்படங்களை அவர்களின் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க இவர்கள் இருவரும் இணைந்து ஒரே திரைப்படத்தில் நடித்தால், அப்படம் மிக பெரிய வசூல் சாதனை புரியும் மற்றும் தமிழ் மார்க்கெட்டும் விரிவடைய உதவும் என கூறிவருகிறார்கள்.
ஆனால் இந்த கேள்விக்கு அப்போது தல அஜித் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “மல்டி ஸ்டார் சுப்ஜெக்ட்டில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. அது என்ன காரணம் என்றால், ஒரு படம் ஷூட்டிங்கின் மூலம் 1500 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும்.
நடிகர் விஜய் படம் பண்ணால் அதனால்1500 தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணால் அது கம்மியா தான் ஆகும்” என கூறியுள்ளார்.