Tamilstar
News Tamil News

அஜித்திற்காக விரதம் இருந்த விவேக், நெகிழ்ச்சி சம்பவம்

தல அஜித் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் நிறைய உள்ளன. இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படம் கொரொனா காரணமாக தற்காலிகமாக நின்றுள்ளது, இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து வலிமை படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் பல வருடம் கழித்து ஒரு நெகிழ்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது. இதில் விவேக் நடிகர் அஜித் மீது எத்தனை அன்பு வைத்துள்ளார் என்பது தெரியும்.

அஜித் ஒரு முறை அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்த போது அவர் உடனே குணமாகி வரவேண்டும் என விவேக் 48 நாட்கள் விரதம் இருந்தாராம்.

இதை விவேக் ஒரு முறை கூட வெளியே சொன்னது இல்லை, இதை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிந்துக்கொண்டு வெளியிட்டுள்ளார்.