தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான இருக்கு வலிமை படத்தைத் தொடர்ந்து தற்போது ajith 61 திரைப்படம் உருவாகி வருகிறது.
வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தன. இதற்கிடையே ஓய்வெடுப்பதற்காக பைக்கில் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார் அஜீத். லண்டன் மற்றும் பல இடங்களில் பைக்கில் சுற்றி வர உள்ளார்.
இந்த நிலையில் அஜித் லண்டனில் பைக்கில் ஹாயாக வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளைக் குவித்து வருகிறது.
