தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இந்த திரைப்படம் நள்ளிரவு ஒரு மணிக்கு ரிலீஸ் ஆனது. சென்னையில் கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர் ஒருவர் அந்த வழியாக மெதுவாகச் சென்று லாரியின் மீது நடனம் ஆடியபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைக் கேள்விப்பட்ட அஜித் அந்த ரசிகரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பது மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் உதவி செய்ய முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
