எனக்கு வாழ்க்கை கொடுத்த எஸ்பிபி மரணம் குறித்து தலை எடுத்துள்ள முடிவை சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவருடைய மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். ஆனால் அஜித், விஜய் ஆகியோர் இது பற்றி வாய் திறக்கவில்லை என குற்றம் கூறி வந்தனர்.
இப்படியான நிலையில் தளபதி விஜய் SPB உடல் அடக்கம் செய்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால் அனைவரின் பார்வையும் அஜித் பக்கம் திரும்பியது.
ஆனால் SPB மறைவால் அஜித் மிகுந்த வேதனையில் உள்ளாராம். விரைவில் SPB வீடு மற்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.