அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், தமிழ் சினிமா பிரிவில் சிறந்த படத்துக்கான விருது டூ லெட் படத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது தனுஷ்-க்கு வழங்கப்படுகிறது.
அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தனுஷ் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல், பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக அஜித் குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
தமிழ் சினிமா விருதுகள்:
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் -அஜித்குமார்
சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)
சிறந்த நடிகை – ஜோதிகா (ராட்சசி)
சிறந்த இயக்குனர் – ஆர்.பார்த்திபன் (ஒத்தசெருப்பு சைஸ் 7)
சிறந்த படம் – டூ லெட்
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத்
மலையாளம்:
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் -மோகன்லால்
சிறந்த நடிகர் – சுராஜ் வெஞ்சரமூடு (ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25)
சிறந்த நடிகை – பார்வதி திருவோத்து (உயரே)
சிறந்த இயக்குனர் – மது சி.நாராயணன் (கும்பளங்கி நைட்ஸ்)
சிறந்த படம் – உயரே
சிறந்த இசையமைப்பாளர் – தீபக் தேவ்
தெலுங்கு
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் -நாகார்ஜுனா
சிறந்த நடிகர் -நவீன் பாலிஷெட்டி (ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா)
சிறந்த நடிகை – ராஷ்மிகா மந்தனா (டயர் காம்ரேட்)
சிறந்த இயக்குனர் – சுஜீத் (சாஹோ)
சிறந்த படம் – ஜெர்சி
சிறந்த இசையமைப்பாளர் – எஸ்.தாமன்
கன்னடம்
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் – சிவராஜ்குமார்
சிறந்த நடிகர் – ராக்ஷித் ஷெட்டி (அவனே ஸ்ரீநாம்நாராயணா)
சிறந்த நடிகை – தான்யா ஹோப் (யஜமானா)
சிறந்த இயக்குனர் – ரமேஷ் இந்திரா (பிரிமியர் பத்மினி)
சிறந்த படம் – முகஜ்ஜியா கனசுகலு
சிறந்த இசையமைப்பாளர் – வி.ஹரிகிருஷ்ணா