Tamilstar
News Tamil News

நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக் போஸ்டர் வெளியானது.. போனி கபூரை வச்சி செய்யும் தல ரசிகர்கள் – போஸ்டருடன் இதோ

நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக் படத்தின் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்தப் படத்தை இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். ஆனால் தயாரிப்பாளர் போனி கபூரை இதுவரை எந்த வித அப்டேட்டையும் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.

இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் போனி கபூர் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருந்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் இன்று தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாள் என்பதால் அவர் நடித்து வரும் வக்கீல் சபாப் படத்தின் புதிய போஸ்டரை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் பவன் கல்யாண் பிறந்த நாளுக்கு போஸ்டர் விட தெரிந்தவர்களுக்கும் அஜித்தின் பிறந்த நாளுக்கு ஒரு அப்டேட் கூட கொடுக்க தெரியலையா என விமர்சித்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள் வலிமை அப்டேட் விட முடியுமா? முடியாதா? என மிரட்டும் தோணியில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்