கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களாக வளம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இதில் தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த இரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கல் பண்டிகைக்கு நேருக்கு நேராக மோதிக்கொள்ள உள்ளன. இதனால் இப்படங்களின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமாக எகிறி வருகிறது.
இந்நிலையில் துணிவு படம் வெற்றி பெற வேண்டும் என்று சபரிமலையில் போஸ்டருடன் சென்று அஜித் ரசிகர்கள் வேண்டுதல் செய்துள்ளனர். அந்தப் போஸ்டரில் துணிவு வெற்றி பெற வேண்டுகிறோம் என்று உள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
