5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கனிகா. சேரன் நடித்த ஆட்டோகிராப், அஜித் நடித்த வரலாறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கனிகா, திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
இந்நிலையில், நடிகை கனிகா, விரைவில் தமிழ் சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேவையானி நடித்த கோலங்கள் தொடரை இயக்கியதன் மூலம் பிரபலமான திருச்செல்வம் தான், தற்போது கனிகா நடிக்க உள்ள சீரியலை இயக்க உள்ளாராம். பட வாய்ப்பு இல்லாததால் நடிகை கனிகா சீரியலில் நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.