Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகமான குளிரால் அஜித் செய்த வேலை.வைரலாகும் தகவல்

ajith-helps-in-mugavari-movie-shooting update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று முகவரி. தயாரிப்பாளர் சக்கரவர்த்தி அவர்களின் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுப்ரமணிய சிவா.

தற்போது பல படங்களை இயக்கியுள்ள இவர் அஜித்துடன் பணியாற்றிய போது நடந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சூட்டிங் ஸ்பாட் தினமும் பல கையில் ஒரு வசனம் எழுதுவோம். தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக எழுதப்படும் அந்த வசனங்களை நான் தான் எழுதுவேன்.

தினமும் அஜித் சார் வந்ததும் அந்த வசனத்தை படித்துவிட்டு என்னை வந்து பாராட்டுவார். ஒருமுறை அப்படித்தான் ஊட்டியில் சூட்டிங் நடைபெற்றது. மூன்று நாள் தான் சூட்டிங் இருந்தாலும் கடும் குளிரை யாராலும் தாங்க முடியவில்லை. விடியற்காலையில் சூரிய உதயத்தை படமாக்க வேண்டும். இந்த நேரத்தில் அஜித் அங்கு ஷூட்டிங் இல் பணியாற்றிய 150 பேருக்கும் ஜெர்கின் வாங்கி கொடுத்தார்.

அந்த விஷயத்தை யாராலும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார். சுப்பிரமணிய சிவா சொன்ன இந்த தகவலை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ajith-helps-in-mugavari-movie-shooting update

ajith-helps-in-mugavari-movie-shooting update