தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தை வினோத் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து இன்றுவரை ரசிகர்கள் அப்டேட் விடும்மாறு கெஞ்சி கேட்டு வருகின்றனர். ஆனால் படக்குழு தொடர்ந்து அமைதி காத்து வருகிறது.
இதனால் உச்சகட்ட கடப்பில் இருந்து வரும் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தல அஜித் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான அசோகா படத்திலிருந்து ஒரு காட்சி வெளியானது. இது அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்தது.
இந்த படத்தின் காட்சியை பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி வெளியிட்டிருந்தது. அசோகா படத்தில் ஷாருக்கானின் அண்ணனாக அஜித் நடித்து இருந்தார்.
இதனால் ஷாருக்கான் இன்னொரு முறை அஜித்தை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க தன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பதாக செய்திகள் கிளம்பியுள்ளன.
மேலும் ஒரு முறை ஷாருக்கான் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியபோது ரசிகர்களின் ஆரவாரம் அவரை பேச விடாமல் செய்தது. அப்போது அஜித் ரசிகர்கள் எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்பதை நான் இப்போது தான் தெரிந்து கொண்டேன்.
அவர் என்னுடன் படத்தில் நடித்த போது அவரைப் பற்றி நான் இந்த அளவிற்கு தெரிந்து கொள்ளவில்லை என கூறி வருத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#DidYouKnow that #Asoka is #AjithThala’s first and only Hindi film that he’s starred in? 🎬#TuesdayTrivia pic.twitter.com/eakhGs9O7q
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 1, 2020