தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. அஜித் புத்தாண்டு தின கொண்டாட்டத்திற்காக தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்று இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன.
தனது மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக்குடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி குவித்தது. அஜித்தின் மகள் அனோஷ்காவிற்கு நேற்று பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அஜித் தன்னுடைய மகளின் பிறந்த நாளில் பள்ளியில் சைக்கிள் டயர் ஓட்டிய வீடியோ ஒன்றையும் ரசிகர்கள் மீண்டும் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளனர். என்னதான் பைக் ரேஸர், கார் ரேஸராக இருந்தாலும் தன்னுடைய மகளுக்காக சைக்கிள் டயர் ஓட்டி இருக்கிறார். சோ க்யூட் தல என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
#HBDAnoushkaAjith#AjithKumar #Anoushka #Thunivu pic.twitter.com/xYz59rvh8n
— Prakash (@prakashpins) January 2, 2023