தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் 61 என்ற படத்தை வினோத் இயக்க உள்ளார். இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அஜித் குமார் அவர்கள் கேரளாவில் கடந்த சில தினங்களாக தங்கி ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். மேலும் இவர் கோவில் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்ய புகைப்படங்களை இணையத்தில் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அஜித் தனக்கு சிகிச்சை அளித்தவர்களுக்கு நன்றி கூறி தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.