தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வலிமை FDFS குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கு செம கொண்டாட்டம்
படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என தேதி மாற்றம் செய்யப்பட்டது. இரண்டு வருடங்களாக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களின் இந்த வலிமை படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தின் டீசர், ட்ரைலர் உள்ளிட்டவைகள் எதிர்பார்ப்புகளை மேலும் எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது வலிமை திரைப்படம் திரையரங்குகளில் நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
வலிமை FDFS குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கு செம கொண்டாட்டம்
இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
