தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்
அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரைக்கு வருகிறது.
படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் ரிலீஸ் உரிமையை கலைமகன் முபாரக் அவர்களின் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியது. விநியோகிஸ்தர் மற்றும் கோயம்பேடு ரோகிணி தியேட்டர் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் விநியோகிஸ்தர் ரோகிணி திரையரங்கில் காலை 4 மணி மற்றும் 7 மணி காட்சி வெளியாகாது என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ரோகிணி தியேட்டர் நிர்வாகம் மற்றும் வினியோகஸ்தர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப் பட்ட நிலையில் இருவருக்கும் இடையே சுமூகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் விநியோகஸ்தரான கலைமகன் முபாரக் அவர்கள் #Rohinitheatre நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியதில் 4&7 மணி காட்சிகள் திரையிடப்படுகிறது. தல #AjithKumar ரசிகர்களுக்காக இந்த முயற்சி 😍 #Valimai திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுங்கள் 💐 தெறிக்கவிடலாமா..🔥 என பதிவு செய்துள்ளார். இதனால் ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க திட்டமிட்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
