தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் ரோலாக் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தார். சூர்யா திரையில் தோன்றியது சில மணித்துளிகள் என்றாலும் அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் போல அஜித் அவருடைய நடிப்பில் உருவாகிவரும் 61 வது படத்தின் ஹீரோ வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே சில போட்டோக்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அஜித்தின் இந்த கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக இருப்பதாகவும் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு டஃப் கொடுக்கும் போல என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
