Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்

Ajith is a sniper

அஜித்குமார் இப்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்தது. முதலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் ‘பைக்’கில் வேகமாக செல்வது போல் ஒரு காட்சி படமானது.

அப்போது, பைக் சறுக்கி அவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அதற்காக அஜித் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து சண்டை காட்சியில் 7 நாட்கள் நடித்து வந்தார். அதன் பிறகு சென்னை திரும்பினார்.

அஜித்குமார் இப்போது, துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறார். துப்பாக்கி சுடுவதில் அவருக்கு நீண்ட கால ஆர்வம் இருந்து வருகிறது. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார்.