தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது அஜித் 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். மீண்டும் போனிகபூர் படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையில் படம் உருவாகி கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் அஜித் தங்கியுள்ளார். இந்த ஹோட்டலில் உள்ள ஊழியர்கள் அஜித்துக்காக பிரத்தியேகக் கேக் கொடுக்க அது இந்த கேக்கை வெட்டிய அஜித் ஹோட்டல் ஊழியருக்கு அன்போடு ஊட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Latest Pics Of #Ajith Anna at Sheraton Hyderabad Hotel🤩💐#AjithKumar #AK61 #AK pic.twitter.com/j7WoQGg1SD
— AK FANS COMMUNITY™ (@TFC_mass) June 11, 2022