தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் வலிமை. இதனைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் 61ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள 62வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் இந்த படங்களை முடித்து அஜித் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இவர்கள் இருவரும் இணையும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது தான் தெரியவரும். இருந்தபோதிலும் ரசிகர்கள் மத்தியில் இது வைரலாகி வருகிறது.