கோலிவுட் திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் அவர் லேட்டஸ்ட்டாக ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
#AjithKumar Recent Click With Fans 🥳🔥 pic.twitter.com/2UFTZZFjQR
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) March 15, 2023