Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் குமார் உடன் இணையும் பிரபல இயக்குனர்கள்.? வைரலாகும் தகவல்

ajith kumar latest upcoming movie updates

கோலிவுட் திரை வட்டாரத்தில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார். இவர் வலிமை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் “ஏகே 61” என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தல அஜித் குமார் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த தகவல் எல்லாம் வெளியாகி வைரலானதை தொடர்ந்து இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழ் சினிமாவில் “விக்ரம் வேதா” என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து பிரபலமான இயக்குனர்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் புஷ்கர்- காயத்ரி தம்பதியினர். இவர்களின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்து அசத்திருந்தனர்.

இப்படத்தை தற்போது புஷ்கர்- காயத்ரி இருவரும் ஹிந்தியில் ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலிகான் இருவரையும் வைத்து இயக்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இவர்களது இயக்கத்தில் நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ajith kumar latest upcoming movie updates
ajith kumar latest upcoming movie updates